இலங்கை கடற்பரப்பில் பயணித்த மற்றுமொரு பாரிய கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்கா!
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், தடைசெய்யப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள், இரவோடு இரவாக கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கப்பலானது தற்போது இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ (430 மைல்கள்) தென்கிழக்கில் தனது இருப்பிடத்தைக் காட்டி வருவதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவத்தால் இடைமறிக்கப்பட்ட குறித்த எண்ணெய்க் கப்பல், இன்று அதிகாலை திடீரெனத் திசைமாறி குறித்த இருப்பிடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியில் நிறுத்தப்பட்டதாக தகவல்..
சுமார் 300,000 தொன் கொள்ளளவு கொண்ட 'திஃபானி' என்ற அந்த கச்சா எண்ணெய்க் கப்பல், தற்போது சரக்குகளுடன் ஏற்றப்பட்டிருப்பதாக மரைன்டிராஃபிக் (MarineTraffic) தரவுகள் காட்டுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணெய்க் கப்பலுக்கு அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (USAID) தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட ஒரு இந்தியக் கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் கூறப்படுகின்றது.
'திஃபானி' கப்பல் ஏப்ரல் கடந்த 10ஆம் திகதி அன்று வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவால் இடைமறிக்கப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் 18 அன்று இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகில் சிறிது நேரம் நின்றதாக இருப்பிடத் தரவுகள் காட்டுவதாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
மெரைன்டிராஃபிக் தகவலின்படி, அது அறிவிக்கப்பட்ட இடமான சிங்கப்பூரை ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam