அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுத்துறை இலங்கையிலா..! வெளியான தகவல்
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியக (எப்.பி.ஐ) அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை திறைசேரி நிதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக எஃப்.பி.ஐ 'குழு' ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தூதரகம் மறுப்பு
எனினும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அது தொடர்பாக விடுத்துள்ளஅறிக்கையில், எஃப்.பி.ஐ குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக சமீபத்திய செய்திகள் 'தவறாகக் கூறியுள்ளன' என்றும், 'அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை' என்றும் அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பல நாடுகளில் உள்ள வழக்கமான நடைமுறையைப் போலவே, உத்தியோகரீதயான வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில் அந்தந்த நாட்டுத் தரப்பினருடன் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்கா தனது தூதரகத்தில் ஒரு எஃப்.பி.ஐ சட்ட ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளது என்றும் தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'குறிப்பாக, முக்கியமான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு விஷயங்களில் துல்லியமான நகர்வுகள் முக்கியமானது' என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
திறைசேரி நிதிகளிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுடன் தொடர்புடைய 625,000 அமெரிக்க டொலர்கள் தனிப் பணம் செலுத்துதல் ஆகியவை தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, எப்.பி.ஐ. அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் குறித்த விளக்கங்களை அளித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri