மத்திய வளைகுடாவில் நிலைகொள்ளவுள்ள அமெரிக்க விமானங்கள்: ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வரும் நிலையில் தமது கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதை தடுக்கும் முகமாக போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த 2 அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு எப்-16 அதிநவீன போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈரான் கடற்படையின் சிறைபிடிப்பு
அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. நீண்ட காலமாக வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
அமெரிக்கா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய், பாரசீக வளைகுடா கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனிடையே, பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி என்ற பகுதி காணப்படுகின்றது.
குறித்த ஜலசந்தியானது ஐக்கிய அரபு அமீரகம் - ஈரானை பிரிக்கும் கடல் பகுதியாக காணப்படுகிறது. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் பெரும் அமெரிக்க கப்பல்கள் இந்த வழியாகத்தான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.
அதேவேளை, இந்த வழியே செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பல்களை ஈரான் கடற்படை சிறைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
அமெரிக்கா - ஈரான் விரிசல்
அவ்வாறு கப்பல்கள் சிறைபிடிக்கபடுவதால் அமெரிக்கா - ஈரான் இடையேயான உறவில் தொடர்ந்து விரிசல் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, தங்கள் நாட்டின் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா போர் கப்பல்களையும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
இவ்வாறு ஈரானின் அச்சுறுத்தல்களை தடுக்கும் முகமாக அமெரிக்க விமானங்கள் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்ய அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
