அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்திருக்கும் தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் (எஃப்.டி.ஓ) பட்டியலில் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்திருக்கும் தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ், 10.08.1997 முதல் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் பிரஜா உரிமை சட்டத்தின் 219வது சரத்திற்கு அமைவாக L J (எல். ஜே) மற்றும் ISIL ஆகிய அமைப்புகள் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகவும் பெயரிடப்பட்டுள்ளன.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam