யாழில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Missing Persons Jaffna Sri Lanka
By Sivaa Mayuri Apr 29, 2023 06:56 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை என்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் அமையுமானால், தமிழர் பிரதேசத்தில் சீன ஊடுருவலை நிறுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இந்த செய்தியை வொஷிங்டனுக்கு தெரிவிப்பார் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், தாம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கும் இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்புவதாக, காணாமல்போன தமிழர்களின் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Us Embassy Office For Jaffna People Request

காணாமல்போன தமிழர்களின் தாய்மார்களின் அறிக்கை

ஊடகவியலாளர் தாரகி என்ற சிவராம் 2005ஆம் ஆண்டு இதேநாளில் கொலை செய்யப்பட்டமையின் நினைவேந்தலை முன்னிட்டு இந்த கோரிக்கையை காணாமல்போன தமிழர்களின் தாய்மார்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

காணாமல்போன தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், இலங்கையில் அரசிடம் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மையைப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும், தாம் நடத்தி வரும் போராட்டத்தின் 2259வது நாள் இன்றாகும்.

இன்று 18 வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலை செய்யப்பட்டார். தம்மை விட்டு விலகாத சிறப்பு மனிதர்கள் நம் வாழ்வில் இருக்கிறார்கள் அவர்கள் மறைந்த பின்னரும் தம்முடன் இருக்கிறார்கள், அவர்களில் தாரகி சிவராம் ஒருவராவார். சத்தியத்தின் காரணத்திற்காக அவரது மக்களுக்கும் உலகிற்கும் அவர் ஆற்றிய சேவை ஒரு சக்திவாய்ந்த மரபுரிமையாக உள்ளது.

யாழில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Us Embassy Office For Jaffna People Request

சிவராமின் பத்திரிகைப் பணி தமிழர்களுக்கும் அமெரிக்க அரசுத் துறைகளுக்கும் ஒரு பொக்கிஷமாக இருந்தது. இனப் போரின் போதும் அதன் பின்னரும் அமெரிக்க அரசாங்கத்தின் அவதானிப்பு தொடர்பில் காணாமல் போன தமிழர்களின் தாய்மார்கள் நன்றி தெரிவிக்க விரும்புகின்றனர்.

அத்துடன் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கர் விதித்த தடையை தாம் வரவேற்பதாகவும் தமிழ் தாய்மாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க அலுவலகத்தை திறப்பதன் மூலம்;, தமிழ் பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும். யாழ்ப்பாணத்தில் அமெரிக்கா இருப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நிகழும் பல சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அத்துடன் இரவு கொலைகள் மற்றும் கொள்ளைகள், தொடர்ச்சியான சட்டவிரோத கண்காணிப்பு மற்றும் உளவு, அத்துடன் நில அபகரிப்பு. அதில் இந்து கோவில்களை இழிவுபடுத்துதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவையும் தடுக்கப்படும்.

முல்லைத்தீவு, பூநகரி, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் பெருமளவிலான காணிகளை சீனர்கள் கொள்வனவு செய்யத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைந்தால், அது தமிழர் பிரதேசத்தில் சீனப் படையெடுப்பை நிறுத்தும் என்றும் காணாமல் போன தமிழர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஜி ராஜ்குமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US