20 வீதத்தினால் வலுப்பெற்றுள்ள டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.8 வீதத்தினால் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி உயர்வு
உலகின் சில முக்கிய நாணய அலகுகளுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இந்த மாதம் 26ம் திகதி வரையிலான காலப் பகுதியில் ரூபாவின் பெறுமதி இவ்வாறு 19.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் யெண்ணுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 26.4 வீதத்தினாலும், ஸ்ரெலிங் பவுண்ட்டிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17 வீதத்தினாலும், யூரோவிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி 18.9 வீதத்தினாலும், இந்திய ரூபாவிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.7 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளது.
வீழ்ச்சி பதிவாகியிருந்த வீதம்
கடந்த 2022ம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |