அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் கனடிய மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்த கால உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் கனடியப் பொருட்களுக்கு மேலதிக வரிகளை விதித்த ட்ரம்ப், லேக் ஒன்டாரியோ (Lake Ontario) ஏரியின் பெயரை "லேக் அமெரிக்கா" (Lake America) என மாற்றி நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
வர்த்தகப் போர்
இந்த சம்பவங்கள் கனடிய மக்களிடையே கடும் அதிருப்தியையும் தேசப்பற்றையும் தூண்டியுள்ளது. இதன் எதிரொலியாக, ஒட்டாவாவில் உள்ள 'ட்ரம்ப் அவென்யூ' (Trump Avenue) வீதியின் பெயரை மாற்றுவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன், கனடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாப் பயணங்கள், அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவை சந்தாக்களை (Subscriptions) பெருமளவில் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க உதிரிப்பாகங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவையை 70 சதவீதத்தால் குறைத்து, அவுஸ்திரேலியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முன்னணி கனடிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எடுத்த தீர்மானத்திற்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான கனடிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 13 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam