ஆயுதங்களுக்காக ட்ரம்பிடம் கையேந்தும் நிலை.. கனடா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்காக அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தில் கனடா கைச்சாத்திடவுள்ளது.
ஜூலை 1ஆம் திகதிக்குள் கனடா ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் கையெழுத்திட முடியும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்புக்கான மூலதனச் செலவினத்தின் ஒவ்வொரு டொலரிலும் எழுபத்தைந்து சென்ட் அமெரிக்காவிற்குச் செல்கிறது. அது புத்திசாலித்தனம் அல்ல" என்று கார்னி கூறியுள்ளார்.
ட்ரம்பின் பதில்..
ஐரோப்பாவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கார்னி தெரிவித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகம் தனது "கோல்டன் டோம்" ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் சேருவது குறித்து கனடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், "கனடா ஒரு தனி, சமமற்ற தேசமாக இருந்தால் 61 பில்லியன் டொலர்கள் செலவாகும், ஆனால் எங்கள் நேசத்துக்குரிய 51வது மாநிலமாக மாறினால் பூச்சியம் டொலர்கள் செலவாகும் என்றும் Truth Social இல் பதிவிட்டுள்ளார்.
ஆனால் முன்னதாக, ட்ரம்புடனான தனது சொந்த ஓவல் அலுவலக சந்திப்பில் கார்னி, கனடா அமெரிக்காவில் சேர ஆர்வம் காட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan