கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களினால் மக்களின் மத நம்பிக்கைகள் இல்லாமல் செய்யப்படக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க இலங்கை அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
1955ம் ஆண்டில் இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட UDHR பிரிவு 18 மூலம், போதனை, நடைமுறை, வழிபாடு மற்றும் அனுசரிப்பு ஆகியவற்றில் தங்கள் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை தூதர் நினைவுபடுத்தினார்.
கொரோனா உலகளாவிய சவால்களை உருவாக்கியது. ஆனால் அது ஒருவருக்கொருவர் நம்பும் இரக்கத்தையும், மரியாதையையும் இழக்கக்கூடாது.
இந்த தொற்றுநோயால் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுடனும் நாங்கள் நிற்கிறோம்.
”
"சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி அவர்களின் நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் மதிக்கப்பட வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
