சீனாவை பின்தள்ளி 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்! வெளியான பதக்க பட்டியல்
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்றோடு நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கோவிட் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜுலை 23- ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலகலமாக ஆரம்பமாகியிருந்தது.
கடந்த 16 நாட்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றோடு நிறைவடைந்தன. இதற்கான நிறைவு விழா கொண்டாட்டங்கள் அங்கு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று, டாப் 3 வரிசையில் உள்ளன.
இதில் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய சீனா, பதக்கப்பட்டியலில் தங்கங்களை அள்ளி முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்த படியாக அமெரிக்கா இருந்தது. ஆனால், கடைசி நாளான இன்று 3 தங்க பதக்கங்களை வென்று சீனாவை அமெரிக்கா பின்னுக்கு தள்ளியுள்ளது.
அமெரிக்கா மொத்தம் 39 தங்க பதக்கம், 41 வெள்ளி பதக்கம், 33 வெண்கலப் பதக்கம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்திலும், 38 தங்கப் பதங்கங்கள், 32 வெள்ளி பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 27 தங்கப் பதக்கம், 14 வெள்ளிப் பதக்கம், 17 வெண்கலப் பதக்கம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.










சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri