அமெரிக்க- இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் முக்கிய சந்திப்பு
அமெரிக்காவும் இலங்கையும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐஎஸ்ஜி என்ற அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், கொழும்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவை(Aruna Jayasekara) சந்தித்துள்ளனர்.
ஐஎஸ்ஜி என்பது அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒரு நிறுவனமாகும்.
திட்ட மதிப்பீடு
அந்த நிறுவனம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடலோர காவல்படை, தேசிய பாதுகாப்பு கல்லூரி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி உள்ளிட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பணியாளர்களுடன் நடந்து வரும் நிறுவன திறன் மேம்பாட்டு திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்தநிலையில் இன்றைய சந்திப்பின்போது, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் இரண்டு தரப்பும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri