ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளரின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் "நல்ல ஆரோக்கியத்துடன்" இருப்பதாக ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
திங்களன்று 31 வயதான இவான் கெர்ஷ்கோவிச்சைச் சந்தித்ததாக லின் ட்ரேசி தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அதிகாரிகள் அவரை அணுகிய முதல் சந்தர்ப்பம் ஆகும்.
ரஷ்யா மறுப்பு
அமெரிக்க தூதரக அதிகாரிகள் முதலில் கெர்ஷ்கோவிச்சை அணுக ரஷ்யாவால் மறுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெர்ஷ்கோவிச்சைச் சந்தித்த லின் ட்ரேசி "அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் மற்றும் வலுவாக இருக்கிறார்," என்று கூறியுள்ளார்.
கெர்ஷ்கோவிச் உளவு பார்த்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு இரகசிய பாதுகாப்பு தகவல்களைப் பெற முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.
சோவியத் காலத்துக்குப் பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரை உளவு பார்த்ததாக மாஸ்கோ குற்றம் சாட்டியது இதுவே முதல் முறையாகும்.
வலுக்கும் எதிர்ப்பு
கடந்த வாரம், அமெரிக்கா அவரை ரஷ்யா "தவறாகக் காவலில் வைத்துள்ளது" என்று அறிவித்தது.
அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல்வாதிகளும் கெர்ஷ்கோவிச்சின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுத்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட, செவ்வாயன்று அவரது சிறைவாசம் "முற்றிலும் சட்டவிரோதமானது" என்று கூறினார்.
செனட் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களான மிட்ச் மெக்கானெல் மற்றும் சக் ஷுமர் ஆகியோர் அவரது தடுப்புக்காவலை கண்டித்து ஒர் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.