கொழும்பு மேயருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் ஜூலி சுங் தனது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Good meeting w/ Colombo’s mayor, @Rosy_Senanayake, about the vital role local gov’t plays in ensuring food security for the urban poor. We also discussed ways to galvanize relief efforts from the private sector & SL diaspora to help alleviate SL’s most severe economic challenges. pic.twitter.com/YYbpazLU5i
— Ambassador Julie Chung (@USAmbSL) June 3, 2022
உணவு பிரச்சினை
நகர்ப்புற ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் மிகக் கடுமையான பொருளாதார சவால்களைத் தணிக்க உதவும் வகையில், தனியார் துறை மற்றும் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை பெற்றுகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகளையும் இதன்போது கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
| செப்டம்பரில் கொழும்பு நகரில் உணவு தீர்ந்துவிடும் - மேயர் எச்சரிக்கை |

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri