தாய்லாந்து சென்றடைந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்
சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தின் லாம் சபாங் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற ஈரானுக்கு எதிரான போரின் போது, கடற்படை முற்றுகை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தப்போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியுள்ளது.
அமைதி வழி ஓய்வு நடவடிக்கை
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்தப் போர்க்கப்பல், நவீன கடற்படை வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாகக் கடலில் பயணித்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
சுமார் 5,000 கடற்படை மற்றும் கடல்சார் வீரர்களைக் கொண்ட இந்தப் போர்க்கப்பலின் ஊழியர்களுக்கு ஓய்வளிக்கும் வகையிலேயே தாய்லாந்தில் இந்த 5 நாட்கள் தங்குமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1954ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நெருங்கிய ஒப்பந்த கூட்டாளியாக தாய்லாந்து விளங்கி வரும் நிலையில், வழக்கமான அமைதி வழி ஓய்வு நடவடிக்கைகளுக்காகவே இந்தக் கப்பல் வருகை தந்துள்ளதாக தாய்லாந்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நீண்டகாலப் போர்ப் பயிற்சியின் காரணமாக கப்பலின் வெளிப்பகுதி துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் தளத்தில் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரின் இந்த வருகை காரணமாக, அருகில் உள்ள பட்டாயா சுற்றுலா நகரத்தின் உள்ளூர் வியாபாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், படையினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில ஆபத்தான விளையாட்டுகளுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 10 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam