இரண்டு அரச வணிக வங்கிகளுக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் அத்தியாவசியப் பொருட்களை, சந்தைக்குக் கொண்டு வருவதற்கு வசதியளிக்கும் வகையில், இரண்டு அரச வணிக வங்கிகளுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் (Ajith Nivard Cabral) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர்கள் தேவைக்காக துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய கொள்கலன்களைத் தேங்கி நிற்பதைப் பார்க்க விரும்பவில்லை.
எனவே மேலும் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்டால், அவற்றை வழங்குவது குறித்தும் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை உள்ள தற்போதைய நிலையில், கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் 600க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.