சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்(Photos)
நுவரெலியாவில் தூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலந்துரையாடல்
கொட்டகலை நகர பகுதிக்கு இன்று(28) பயணம் மேற்கொண்டிருந்த இராதாகிருஷ்ணன், அங்குள்ள 'லாப் கேஸ்' முகவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவை முறையாக விநியோகிப்பதில் உள்ள நெருக்கடி நிலை குறித்து கேட்டறிந்துள்ளதுடன் மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரிக்கை
நாட்டிலுள்ள நெருக்கடி நிலமைக்கு மத்தியிலும் நகர் பகுதிகளில் எரிவாயு விநியோகம் இடம்பெறுகின்றது.
ஆனால் தூர இடங்களில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு எரிவாயு வருவதில்லை என்றதுடன், இதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் அந்த கட்சியின் உறுப்பினர்களும், அதிகாரிகளும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan