அவதானமாக செயற்படுங்கள்! வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வட மாகாணத்தில் தற்போது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையேற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாகவும், இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2 நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்தனர். இதன் பின்னர் இரண்டு வாரங்களில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்த நிலையில் இருந்து யாழ்ப்பணத்தை மீட்டெடுப்பதற்காக மலேரியா ஒழிப்பு குழு, சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த மாகாணத்தின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்ட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



