இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு
இலங்கையில் ஆபத்தான டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாறுபாட்டு புதிய வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட தெமட்டகொட பகுதியில் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. டெல்டா மாறுபாட்டிற்காக நாட்டின் பிற பகுதிகளிலும் சோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்ட கொழும்பில் பி.சி.ஆர் சோதனைகள் இன்று நடத்தப்பட்டன. இதன்படி, தெமட்டகொட அரமயா வீதியில் உள்ள 200வது தோட்டத்தில் இன்று 150க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பில் உள்ள பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா மாறுபாடு மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.