கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கெதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவை நேற்று(1) மாவட்ட செயலகத்தில் சந்தித்து கல்முனை கடற்கரைப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு அபாயம் குறித்து சுட்டிக்காட்டியதுடன் கடலரிப்பைத்தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டனர்.
கல்முனை கடற்கரைப்பகுதியில் நிலவும் கடலரிப்பு காரணமாக கடற்கரைப்பகுதிகள் முற்றாக அழிந்துள்ளதோடு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலரிப்பு
தற்பொழுது கடலரிப்பு கடற்கரை வீதியை அண்மித்துள்ளதோடு கடற்றொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் தற்காலிக தங்குமிடக்கட்டிடங்களும் அழிவுக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடலரிப்பால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு கடற்றொழில் செயற்பாடுகளுக்கான அணுகல் மற்றும் சேமிப்பு வசதிகள் அழிந்துவிட்டதாகவும், இதனால் கடற்றொழில் சமூகம் கடுமையான பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதையும் இவர்கள் அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தினர்.
இதேவேளை, ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த Groynes (கடற்கரை பாதுகாப்பு கல்லணை) திட்டம் முறையாக தொடரப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதையும், அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததையும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இவர்கள். கொண்டு வந்தனர்.
இந்த விடயங்களை ஆழமாக செவிமடுத்த மாவட்ட அரசாங்க அதிபர், விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
