சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள மாண்டஸ் சூறாவளியின் தற்போதைய நிலை தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 5 ஆம் திகதி தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட இலங்கையின் சில இடங்களில் கடும் மழை பெய்தது.
இதனால் பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருகை தர ஆரம்பித்தது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
காற்றில் ஏற்பட்ட இந்த ஆரோக்கியமற்ற நிலையானது தற்போது வரை நீடிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து 280 கிலோமீட்டர் தூரம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'மாண்டஸ்' சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து 280 கிலோமீட்டர் வட-வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி, நேற்று (09) இரவு 08.30 மணிக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையின் ஊடாக இன்று அதிகாலை கடந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன் தாக்கமாக, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்ததுள்ளது.
அத்துடன் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க ஆரம்பித்ததுள்ளதாகவும் புயலின் பின்பகுதி இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.
கன மழை தொடர்பான தகவல்

புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam