ஆபத்தாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
குறித்த இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கூறியுள்ளார்.
பட்டம் விடுவதால் ஏற்படும் மின் அதிர்ச்சிகளால் ஆழமான தீக்காயங்களுடன் நோயாளிகள் அதிகளவு அனுமதிக்கப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன.
பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலைகளில் கடுமையான தீக்காயங்களுடன் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பெரும்பாலான நேரங்களில், நாம் வாங்கும் நூல்கள் நீரில் நனைந்தாலோ அல்லது சில சமயங்களில் உலோகங்கள் கலந்து செய்யப்பட்ட மின்கடத்திகளாக செயற்படுகின்றன.
இவை உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் பட்டவுடன், அந்த நூல் வழியாக அதிக மின்சாரம் பாய்கிறது. இதன் காரணமாக திசுக்களும், இரத்த நாளங்கள், நரம்புகள் என அனைத்தும் தீக்காயமடைகின்றன.
ஆகவே, பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.