மின்சார சபை விடுத்துள்ள அவசர செய்தி
சூரிய மின்படலங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மின்சார சபை அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து கூரை சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களிடமும் மின்சார சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கோரிக்கை
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.
அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
