வடமாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கோரிக்கை கடிதம்
யாழ். மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பின் போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் வலி.மேற்கு பிரதேச சபை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
மேற்படி வீதி புனரமைப்பின் போது மானிப்பாய்க்கும் சங்கானைக்கும் இடையே பெரியதும் சிறியதுமாக ஆறு வரையான மதகுகள் புனரமைக்கப்படாமல் காபட் இடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மதகுகள் அடுத்துவரும் சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அவற்றைப் புனரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த வீதிப் புனரமைப்பின் போது வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மதகுகளும் புனரமைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சபை உறுப்பினர் ந.பொன்ராசா பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.
இதையடுத்தே, வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு நேற்று (11)கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
