கிழக்கில் அரசாங்கத்தால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள்! சுட்டிக்காட்டும் கலையரசன் எம்.பி
பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை வழி நடத்திய ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் - அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவியை கௌரவித்து, பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை தமிழ் மக்கள் ஏற்க முடியாத சூழல் இருக்கின்றது. ஏனென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்து 12 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அது மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமையப் பெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் எழப்போகும் நெருக்கடியிலிருந்து இலங்கை தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை பொறுத்தமட்டில் தமிழ் மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளாக நியமித்து இருப்பவர்கள் கடந்தகால போர்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை வழி நடத்திய ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதை வெறும் கண்துடைப்பாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
எனவே போர்க்குற்ற விடயத்தில் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் விடயங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். உள்ளக ரீதியான பொறிமுறை என்கின்ற விடயத்தை நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடுகளாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அழிவுற்று பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமங்களும் இன்னும் அழிவுற்றுக் கொண்டே இருக்கின்றன.
அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் பல முன்னெடுப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இச்செயல்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அழிவுகளையும், ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன என குறிப்பிட்டுள்ளார்.









10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
