கொழும்பில் அவசர சந்திப்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று (06) நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் நடைபெறும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் இந்த சந்திப்பில் பல நிபுணர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.

வரவு செலவுத்திட்ட விவாதம்
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி எம்.பி.க்களை பல முக்கியமான விடயங்களுடன் தயார்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாகவும், இதற்காக அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |