கனேடிய மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
கனேடியர்கள் உடனடியாக காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனடியர்கள் தங்கள் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ கூட தங்கள் காய்ச்சல் தடுப்பூசிகளைப் செலுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனாவுக்கான தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் பருவ காய்ச்சலுக்கான தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளுமாறு அவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
கடந்த ஆண்டில் பருவ காய்ச்சல் மிகவும் குறைவான அளவிலேயே அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு ஆண்டில் பருவ மிக குறைவாக இருக்குமானால், அதற்கு அடுத்த ஆண்டில் பயங்கரமாக அது தாக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனாவிற்கான சுகாதார வழிக்காட்டல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் கடந்த ஆண்டு பருவ காய்ச்சலின் பாதிப்பு மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது. அதற்கான மருத்துவ பின்னணிக்கமைய இந்த வருடம் பருவ காய்ச்சலின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும் என மருத்துவர்கள் மற்றும் சுகாதார பிரிவினர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.