அதிகரிக்கும் விலைகள் - பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம், இன்று (31.03.2026) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் தேவையற்ற பொருட்களை பொது மக்கள் பதுக்கி வைக்க வேண்டாம்.
விலைகள் அதிகரிப்பு
அவ்வாறு செய்தால், சந்தைகளில் தேவையற்ற பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.