முன்னாள் பெண் போராளியின் வலி சுமந்த கண்ணீர் கதை! (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், ஊரெழு கிராம பகுதியில் 3 பிள்ளைகளோடு கஷ்டப்படும் முன்னாள் பெண் போராளி உதவ யாருமின்றி,எறிகுண்டு காயங்களுடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக முன்னாள் போராளியொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600