குண்டு துகள்களை உடலிலிருந்து நீக்காத போராளியின் கண்ணீர் சுமந்த கதை(Video)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
குண்டு துகள்களை உடலில் சுமந்தவாறு தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக முன்னாள் போராளியொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
