இலங்கையை ஒரு வார காலத்திற்கு முடக்க வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
ஒரு வார காலத்திற்கேனும் நாட்டை முடக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவ்வாறு செய்யும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடு மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளது. நாள் தோறும் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர்.
இதனால் சுகாதாரத்துறைக் கட்டமைப்பினால் இயலுமை பாதிக்கப்படும்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் கோவிட் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமாயின் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கேனும் நாட்டை முடக்குவது உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 55 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
