காலி கிரிக்கெட்டின் பின்னர் வெளியிடப்பட்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல்
இலங்கையின் காலியில்(Galle) இடம்பெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தநிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் இறுதிப்புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தென்னாபிரிக்க முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
டெஸ்ட் செம்பியன்சிப்
எனவே இந்த இரண்டு அணிகளே விரைவில் நடைபெறவுள்ள டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

இந்தநிலையில் இந்தியா இந்தப்புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது நியூஸிலாந்து நான்காம் இடத்திலும், இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி, 6 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பங்களாதேஸ், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானிய அணிகள் அடுத்த மூன்று இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 19 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam