க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம் : ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் (Video)
க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பரீட்சைக்கு ஆர்வமாக செல்வதை காண முடிந்தது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (04.01.2024) ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் நாடுபூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
அதேவேளை, இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.
மலையக மாணவர்கள்
மலையக மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் பங்கெடுப்பதற்காக மிக ஆர்வத்துடன் இன்று பரீட்சை மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.
அந்தவகையில், மலையகத்தில், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி, புனித கெப்ரியல் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவா்கள் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு குறித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாணவர்கள்
வவுனியாவில் 2497 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன், அவர்களுக்காக 20 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டிற்க்கான க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ள அதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வவுனியாவில் 2497 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அமைதியான வகையில் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
செய்தி - திலீபன்
யாழ்ப்பாணம்
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
[
செய்தி - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |