பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தடை உத்தரவு, இன்று (04.07.2024) வழங்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாக்குமாறு கோரி தோட்ட நிறுவனங்களால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சம்பள உயர்வு
ஆகரபத்தன பிளான்டேஷன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 21 தோட்ட நிறுவனங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுதாரர்கள், தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உள்ளிட்ட 52 பேரை வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தோட்டத் தொழிலாளியின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக நிர்ணயம் செய்து தொழில் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக மனுவில் உள்ள தோட்ட நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மனுதாரர்களின் கோரிக்கை
இதற்கிடையில், தொழில் அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்த இந்த முடிவு இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த முடிவை அரசு தன்னிச்சையாக எடுத்ததாக கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |