2000 ரூபாய்க்கு மாத்திரம் டீசல் பெற்றுக்கொடுப்பதாக கூலி வாகன ஓட்டுனர்கள் கவலை (Photos)
மலையகத்தில் எண்ணெய் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் எண்ணெய் பெற்றுக்கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து மலையகத்தில் உள்ள எண்ணெய் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் நிரப்பு நிலையங்களில் வாகனம் ஒன்றுக்கு சுமார் 2000 ரூபா பெறுமதியான எண்ணெய் மாத்திரம் நிரப்பப்படுவதாகவும் இந்த எண்ணெயினை கொண்டு தங்களுக்கு போதியளவு சவாரி செய்ய முடியாதுள்ளதாகவும் கூலி வாகன ஓட்டுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கிட்ட உள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் கூலி வாகன ஓட்டுனர்கள் சவாரிகளை மேற்கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தினை தேடிக்கொள்ள முடியாதுள்ளதாக கூலி வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்
குறைந்தளவு எண்ணெயினை வைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தினையும் தேடி கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் இதனால் தங்களுக்கு தவணைக்கட்டணம்,செலுத்த முடியாதுள்ளதாகவும்,போதியளவு வருமான இன்மை காரணமாகவும், பொருட்களின் விலை காரணமாக தங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட எண்ணெய் நிரப்பு நிலையங்களில் இன்று (05) அதிகாலை முதல் வாகனங்களுக்கு தனியார் பஸ்களுக்கும் டீசல் எண்ணெய் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதனாலும் அதிகமானவர்கள் எண்ணெய் நிரப்புவதற்காக கேன்களை வைத்துக்கொண்டு நின்றதனாலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக எண்ணெய் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
