அரசாங்கம் மலையக மக்களை உதாசீனம் செய்கின்றதா என மனோ கேள்வி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களை உதாசீனம் செய்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம்(9.1.2026) உரையாற்றிய போது அவர் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வசதிகள் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மலையக மக்களுக்கு காணி
மலையக மக்களுக்கு காணி வழங்குவதும் வீடு வழங்குவதும் பொதுவான ஓர் திட்டம் எனவும் அது இந்திய அரசாங்கத்துடன் பேசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட திட்டம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுவான வீடமைப்பு திட்டமும் , பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் என்பன இரு வேறு விடயங்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்தபோதிலும் மலையக மக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டுத் தொகை
அண்மையில் நாடாளுமன்ற வளகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி மலையக மக்கள் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது மலையக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாளுக்கு நாள் அந்த நம்பிக்கையை ஜனாதிபதி குறையும் வகையில் ஜனாதிபதி செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடரில் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமாயின் அதே இழப்பீட்டுத் தொகை மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்ல என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam