வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை
புதிய இணைப்பு
மண்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த மலையக தொடருந்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் பாறை சரிந்து விழுந்ததில் மலையகத்திற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
பதுளைக்கு செல்லும் இரவு நேர தபால் தொடருந்து தியத்தலாவ தொடருந்து நிலையத்தை நெருங்கும் போது அருகில் உள்ள மலையில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால் தொடருந்து மார்க்கம் தடைபட்டது, ஆனால் சாரதி இயந்திரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொடருந்தை நிறுத்தியுள்ளார்.
தொடருந்து பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் தடைகளை நீக்கி தொடருந்து சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
பதுளை - தியத்தலாவ பகுதியில் தொடருந்து பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மலையக தொடருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிக நிறுத்தம்
தியத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் மலையக தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.