யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பொதுமக்களிடம் முன்வைக்கும் கோரிக்கை

University of Jaffna Sri Lankan Peoples Weather
By Theepan Nov 29, 2024 07:46 PM GMT
Report

யாழ். (Jaffna) பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவ முன்வருமாறு கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடரும்பட்சத்தில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவ முன்வாருங்கள். 

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

 சீரற்ற காலநிலை

அண்மைய சில நாட்களாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்திலே காணப்படுகின்ற சீரற்ற காலநிலை என்பது எங்களுடைய தமிழ் தேச உறவுகளை அனரத்த ரீதியான பாதிப்புகளுக்கு உருவாக்கியுள்ளது.

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பொதுமக்களிடம் முன்வைக்கும் கோரிக்கை | Uoj Students Requests To People

அந்தவகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளாமானவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27,28,29ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த பரீட்சைகள் யாவும் கலைப்பீடாதிபயினால் பிற்போடபட்டுள்ளது.

அவ்வளவு தூரம் மழையின் நிலை காணப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி வருகின்றார்கள். அவ்வாறு தங்கி வருகின்ற விடுதிகள் யாவும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றன. 

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

கூடுமான உதவி 

வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம்.

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பொதுமக்களிடம் முன்வைக்கும் கோரிக்கை | Uoj Students Requests To People

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த அனர்த்தம் மிகுந்த வேதைனையை வழங்கியுள்ளது. இந்த சவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம். எங்களுடைய கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளோம்.

காலை வேளை உணவுகளையும் வழங்கி வருகின்றோம். மாணவர்களுக்கு திடீர் அனர்த்தத்தின் பொழுது விரிவுரையாளர்கள் பீடாதிபதிகள் உதவியாக உள்ளனர்.

உயர்தர பரீட்சை பிற்போடபட்டுள்ள நிலையில் கல்வி பொருளாதார வாழ்வியல் ரீதியில் நாம் பிற்போடபட்டுள்ளோம். மழை தொடரும்பட்சத்தில் எமது மாணவர்களுக்கு பலத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் உள்ள நபர்கள் பொருளுதவி மற்றும் நிதியுதவியையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US