இலங்கையில் தடுப்பூசி போடாத 30 வயதிற்கு மேற்பட்டோர் இரு இடங்களுக்கு செல்ல இனி அனுமதி இல்லை
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் சாலைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
மன்னார் மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் கோவிட் தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம்
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri