இலங்கை விரைந்த சீன அதிகாரிகள்! விதிக்கப்பட்ட நிபந்தனை - வெறும் புன்னகையை பதிலாக்கிய மகிந்த: நடந்தது என்ன?
அடுத்த சில தினங்களில் சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் எனவும் அதன் மூலம் ஜனவரி மாதத்தில் கடனை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்ததில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
சீனா வழங்கும் இந்த கடன் நிதி எவ்வித செலுத்துதல்களுக்கும் பயன்படுத்த முடியாது என சீனா விதித்திருக்கும் நிபந்தனையே இதற்கு காரணம் என சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.
சீனா வழங்கும் இந்த கடனை வைப்பு நிதியாக வங்கியில் வைத்திருக்க முடியுமே அன்றி செலுத்துதல்களுக்காக பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது.
இலங்கையின் கோரிக்கைக்கு அமைய கடனை வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பிரதிநிதிகள், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்தனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தாம் சீனாவிடம் இருந்து ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கடனுதவியை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
எனினும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லெண்ணத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த கடனை பெற கப்ராலுக்கு நீண்ட தெளிவுப்படுத்தலை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை வந்திருந்த இந்த சீன பிரதிநிதிகள், அண்மையில் ஒரு நாள் இரவு பிரதமரை சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். இதன் போது இந்த கடன் சம்பந்தமான பேச்சு நடத்தப்பட்டது.
தமக்கு இதுவரை தேவையான அனுமதி கிடைக்கவில்லை என சீன பிரதிநிதிகள் பிரதமரிடம் கூறியுள்ளனர். தேவையான ஆவணங்களுடன் கூட இன்னும் தயார்ப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடனை வழங்குவது தொடர்பில் சாதகமான பதிலை வழங்காது, சீன பிரதிநிதிகள், பிரதமருடனான சந்திப்பை நிறைவு செய்து திரும்பிச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் சில நாட்களுக்கு பிறகு சீனா நோக்கி புறப்படும் முன்னர் அவர்கள் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது சீன அரசாங்கம் வழங்கிய செய்தியை கப்ராலுக்கு தெரியப்படுத்திய அவர்கள், இந்த பணத்தை வழங்கும் விதம் பற்றியும் கூறியுள்ளனர்.
ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முடியும் எனவும் எனினும் அதனை எந்த விடயத்திற்காகவும் பயன்படுத்த முடியாது என சீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை வைப்பில் வைத்திருக்க மாத்திரம் வழங்க முடியும் எனவும் என சீன பிரதிநிதிகள், கப்ராலிடம் தெரிவித்துள்ளனர்.
இது ஏதோ ஒரு வகையில் நல்ல செய்தி என்பதால், பேச்சுவார்த்தை முடிந்த கையுடன் கப்ரால் பிரதமரை சந்தித்து, இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அப்போது பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, “ எவருக்கும் செலுத்த முடியாத பணத்தை எமக்கு வழங்குவதில் என்ன பயன்” எனக் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கப்ரால், “ அதுதான் சார் எம்மால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாதாம். பணத்தை வங்கியில் வைப்புச் செய்து, தேவையானவர்களுக்கு எம்மிடம் பணம் இருக்கின்றது என்பதை காண்பிக்க மாத்திரமே முடியும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக மகிந்த ராஜபக்ச புன்னகை மாத்திரமே செய்துள்ளார் என அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
You My Like This Video
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan