சஜித்திற்கு சவால் விடுக்கும் ஐ.தே.கட்சி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) மூன்று வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் போன்ற தினத்தில் மேற்கொண்ட அரசியலமைப்பு சூழ்ச்சியே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட அரசியலமைப்பு சூழ்ச்சியே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரச சேவைகள், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உட்பட மலைபோல் குவிந்துள்ள பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
52 நாள் அரசியல் நெருக்கடி காரணமாகவே நாடு கஷ்டத்திற்கு உள்ளானது என்பதை முடிந்தால், ஊடகங்களுக்கு முன்னால் வந்து கூறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(Sajith Premadasa) சவால் விடுக்கின்றேன்.
அன்று எமது கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித்தை பிரதமராக நியமிக்க உதவுமாறு ஜனாதிபதி சிறிசேன பல முறை எம்மிடம் கோரிக்கை விடுத்தார்.
இப்படியான உள்விளையாட்டு காரணமாக நாட்டில் தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மழையில் நனைந்து அப்பாவிகளாக விவசாயிகளை ஏமாற்றாது, முடிந்தால், இந்த சவாலை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை கேட்கிறேன்.
சஜித் பிரேமதாசவால் அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரமல்ல, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராகவும் பேச முடியாது எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri