மக்களை தவறாக வழிநடத்தும் ஐ.தே.கவின் ஊடக அறிக்கை!விமர்சிக்கும் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார
சிறையில் இருக்கும் தேரர்களின் காவி உடை தொடர்பில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டிருக்கும் அறிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை பொது மக்களை தவறாக வழிநடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக "உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின்" அழைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள்...
இது மிக விசித்திரமான ஓர் ஊடக அறிக்கையாகும். அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி தனது அயோக்கியத் தனத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்கள்
ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியும் உடை தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமித்தது ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும்,
அத்தகைய குழுவின் எவ்வித அவசியமும் இல்லை என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதற்கு முன்னர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என்று சொல்கிறது.

மேலும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் நிலையான கட்டளைகளில் (Prisons Standing Orders) ஏற்கனவே தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கை சிறைச்சாலைச் சட்டத்தின் 550 ஆவது நிலையான கட்டளையை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறியுள்ளது. சிறைச்சாலைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் "யாதேனும் நீதிமன்றக் கட்டளையின் பேரில் அல்லது வேறு வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி,
சிறைச்சாலை சீருடையில் அல்லது கைதியின் உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படக் கூடாது என்பன அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான கூற்றுக்களாகும். இதற்கப்பால் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளன.
இவ்விடயங்கள் தொடர்பாக தெளிவான, நேரடியான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருக்கும் போது, இது குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க குழுவை நியமிப்பது வேண்டுமென்றே பிரச்சினையை மறைப்பதற்கும் இழுத்தடிப்பதற்குமான முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளது.
மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஊடக அறிக்கையில் கட்டளைச் சட்டத்திலுள்ள பல விடயங்களை மறைத்துள்ளது.இது சர்ச்சைக்குரியது.
"மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில்,சிறைச்சாலையின் உடைச் சக்கரத்திற்கு (Clothing Scale) பொருந்தக்கூடியதுமான ஆடைகளை அணிய வேண்டும்.
அவ்வாறு விநியோகிக்கப்படும் ஆடைகளில் சிறைச்சாலை ஆடைகள் என அடையாளங் காண்பதற்கான எவ்விதக் குறியீடும் இருக்கக்கூடாது."
இதன் அர்த்தம் என்னவென்றால் (Jumper - கைதி சீருடை) அணிவித்து நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில்,இந்தப் பகுதியை குறிப்பிடப்படவில்லை. அதைப் பற்றிப் பேசவுமில்லை, அதை மறைத்துவிட்டார்கள்.இந்த கட்டளைகளை மாற்றவே ஜனாதிபதியிளால் குழு நியமிக்கப்பட்டது.
எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், உங்களது பேச்சுக்களை கேட்டு ஏமாந்த ஒரு நாடு இருந்தது.இது இப்போது மக்கள் மத்தியில் எடுபடாது என குறிப்பிட்டுள்ளார்.