ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பு
இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு, ஏனைய அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளதாக அதன் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பழைய ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இல்லை. இன்று ஒரு புதிய ஐக்கிய தேசியக் கட்சியே வழமையில் உள்ளது.
எனவே, இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்ற ஐக்கிய தேசிய கட்சி, ஏனையோருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
ஐக்கிய கட்சி நாட்டை கட்டியெழுப்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே தமது நீண்டகால திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில், நாடு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும்.
எனவே பாரம்பரிய அரசியலை நிராகரிக்கும் மக்களின் அபிலாஷைகளுடன் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.