தாய்லாந்து துணைப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்காதது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி
இலங்கைக்கு வருகை தந்த தாய்லாந்து துணைப் பிரதமரருக்கு அரச ரீதியான தூதரக வரவேற்பும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படாதது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்தபோதும், அவருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பும் பாதுகாப்பும் வழங்கப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
விமர்சனம்
மிஹிந்தலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'மிஹிந்து மகா சேய' தூபியின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே தாய்லாந்து துணைப் பிரதமர் வருகை தந்தார்.

இந்தநிலையில், பௌத்தர்களுக்கு மிக முக்கியத்துவமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்ற அவருக்கு உரிய தூதரக மரியாதை அளிக்கப்படாதது அரசாங்கத்தின் ராஜதந்திர முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது என ஐக்கிய தேசியக்கட்சி விமர்சித்துள்ளது.
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam
பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு News Lankasri