ஐக்கிய தேசியக்கட்சியினரே யாழ்ப்பாண நுாலகத்தை எரியூட்டினர்- நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!(காணொளி)
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியினரே யாழ்ப்பாண நுாலகதை எரியூட்டியதாக பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக்கட்சியினரே யாழ்ப்பாண நுாலகத்தை எரித்ததாக குற்றம் சுமத்தினார்.
இதன்போது எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிந்தக மாயாதுன்னவின் கருத்துக்கு ஆட்சேபனையை வெளியிட்டனர்.
அவ்வாறு எவரும் இருந்தால் அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த சிந்தக மாயாதுன்ன, ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இரண்டல்ல என்று குறிப்பிட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க போன்றோரே ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
பிரேமதாசவின் மகனிடம் இதனை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை த.மு. தஸநாயக்கவின் கொலையில் சிந்தக மாயாதுன்னக்கும் தொடர்பு உண்டா என்று நாடாளுமன்ற துஷார இந்துனில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது தமது மாமா முறையான த.மு. தஸநாயக்கவை தமிழீழ விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக குறிப்பிட்டார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
