சஜித் கட்சியின் பரிந்துரைக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எதிர்ப்பு
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சாரூக் நியமிக்கப்படுவதற்கு கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ராம்சி டோனி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது
ரிசா சாரூக்கின் பொது நற்பெயரை முழுமையாக அறிந்திருப்பதாகவும், அதனால் முதல்வர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவதை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது என்றும் டோனி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் முன் ஆலோசனை இல்லாமல் ரிசா சாரூக்கை பரிந்துரைத்தால், அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர், தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




