முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு அவசியம்: ஐ.தே.க. வலியுறுத்து
இலங்கையில் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்வை தமிழ் டயஸ்போராக்கள் பழிவாங்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் எம்.பி. சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மகிந்த உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி பதவியை வகிப்பவர் துணிவுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கம்
உலக நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது. எனவே, ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு 90 வீதமானோருக்குச் சாதகமாக இருக்கலாம். 10 வீதமானோர் அதனை எதிர்க்கலாம்.
எனவே, அந்த 10 சதவீதமானோர், ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்கள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
பாதுகாப்பு நடவடிக்கை
குறிப்பாக போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் மகிந்த ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில் சில தமிழ் டயஸ்போராக்கள் செயற்படலாம்.
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வைத்து மகிந்தவைப் பழிவாங்கக்கூடும். ஆகவே, மகிந்தவுக்குப் பாதுகாப்பு அவசியம். வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் பாதுகாப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 3 மணி நேரம் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

IQ Test: இரண்டில் ஏழை குடும்பம் எது? மூளையை சலவைச் செய்து கண்டுபிடிங்க.. 5 வினாடிகள் மட்டுமே! Manithan

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
