ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதே ஐ.தே.க. வின் திட்டம்
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி குளியாப்பிட்டியவில் ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மக்கள் பேரணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் வலிமையை பறைசாற்றுவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு
குறித்த பேரணியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதைக் குறித்து இதுவரை எதுவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போதைய நாட்களில் அது தொடர்பான கலந்துரையாடல்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிட ஐக்கிய தேசிய கட்சி உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |