ஐ.தே.கட்சியும் இ.தொ.காவும் இணைந்து போட்டி-மருதபாண்டி ராமேஸ்வரன்
இம்முறையினர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இணைந்து போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யானை சின்னத்திலும் சேவல் சின்னத்திலும் போட்டி

இதன்படி நுவரெலியா மாநகர சபை, ஹட்டன்-டிக்கோயா நகர சபை, கொத்மலை, வலப்பனை,ஹங்குராங்கெத்தை, அம்பகமுவை பிரதேச சபைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்திலும் தலவாக்கலை-லிந்துலை நகர சபை, நுவரெலியா,மஸ்கெலியா,ஆக்கரப்பத்தனை, நோர்வூட்,கொட்டகலை பிரதேச சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்திலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இணைந்து போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றி பெற்றுப்பெற போவதாகவும் ராமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam