கதிகலங்கியுள்ள ராஜபக்சர்கள்! களத்தில் இறங்கிய முக்கியஸ்தர்
அரசியல் அனுபவமிக்க நிர்வாக அனுபவம் நிறைந்தவர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்தினால் ஏன் வினைத்திறனுடன் செயற்பட முடியாமல் போயிருக்கிறது என்ற கேள்வி உள்ளது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தபோது இப்போதைக்கு அசைக்க முடியாத மிகவும் பலம்வாய்ந்த அரசாங்கமாகவே அது கருதப்பட்டது.
ஏனென்றால்இ மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ என்ற இரட்டை ஆளுமைகளின் தலைமையில் இந்த அரசு உருவாக்கப்பட்டது.
மேலதிகமாக அதற்கு, மூன்றில் இரண்டுக்கு நெருக்கமான பெரும்பான்மை பலமும் இருந்தது. அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் செல்வாக்குமிக்கவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்கவோ, அச்சுறுத்தவோ முடியாது என்றே கணிக்கப்பட்டது.
ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அரசாங்கம் எல்லாத் தரப்பினராலும் மிரட்டப்படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.
இது தொடர்பில் விரிவான அரசியல் விமர்சனங்களை தாங்கி வருகின்றது இந்த விசேட தொகுப்பு,
