அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வு: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(9) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
கந்தளாய் - சீனிபுர ரங்கன பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் சீனிபுர இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மூன்று உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களை அக்போபுர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு,
கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார்
மேலும் தெரிவித்துள்ளனர்.



